📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 27, 2026 09:03 PM

10வது சதம்.. மனசாட்சியே இல்லாத ரன் மெஷின்.. சொந்த மண்ணில் சுப்மன் கில் மரண மாஸ் ரெக்கார்ட்!

10வது சதம்.. மனசாட்சியே இல்லாத ரன் மெஷின்.. சொந்த மண்ணில் சுப்மன் கில் மரண மாஸ் ரெக்கார்ட்!

10வது சதம்.. மனசாட்சியே இல்லாத ரன் மெஷின்.. சொந்த மண்ணில் சுப்மன் கில் மரண மாஸ் ரெக்கார்ட்!

திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 96 பந்துகளில் சதத்தை எட்டி இருக்கிறார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் 10வது சதத்தை விளாசி அசத்தினார். கடந்த 2 ஆண்டுகளில் சுப்மன் கில் சொந்த மண்ணில் ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள், 6 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது. இதன்பின் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே சுப்மன் கில் அற்புதமான டச்சில் இருந்தார்.

அவரின் ஷாட்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அவரின் ஃபுல் ஷாட், கட் ஷாட்கள் கண்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமைந்தது என்றே சொல்லலாம். 6வது ஓவருக்கு பின் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்த போதும், சுப்மன் கில் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.

கொஞ்சம் பவுன்ஸ் உடன் பந்து எழுந்து வந்தாலும், சுப்மன் கில் அதனை பவுண்டரி லைனுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 49 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் அதிரடியாக ஆடிய சுப்மன் கில், கண் இமைக்கும் நேரத்தில் 90 ரன்களை கடந்தார். இதனால் சுப்மன் கில் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கேற்ப கொஞ்சமும் பதற்றமில்லாமல் சுப்மன் கில் சதத்தை எட்டினார்.

96 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட சதத்தை எட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 10வது சதம் இதுவாகும். இது ரசிகர்கள் மத்தியில் மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சுப்மன் கில் மொத்தமாக ஆடிய ஒருநாள் போட்டிகளே 67 தான்.

67 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள சுப்மன் கில் 10 சதங்கள் மற்றும் 20 அரைசதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் 2024ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் ஆடியுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். 10 இன்னிங்ஸில் 3 சதங்கள், 6 அரைசதங்களை விளாசி இருக்கிறார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே அரைசதம் மிஸ்ஸாகி இருக்கிறது.

சுப்மன் கில் இன்னும் கேப்டன்சியில் முன்னேற வேண்டிய தேவை இருந்தாலும், கேப்டன்சி பிரஷர் கொஞ்சம் கூட அவரின் பேட்டிங்கை சோதிக்கவில்லை. இதனால் சுப்மன் கில் விரைவில் கேப்டன்சியில் ஒரு முன்னேற்றத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சூப்பர் ஸ்டாராக உருவாகி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.