சிங்கப்பூர் இந்திய மாணவர்களுக்கு சிண்டா விருதுகள்
ஆண்டுதோறும் சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டுச் சாதனைகளை அங்கீகரிக்கும் சிண்டா உன்னத விருதுகளில், கடந்த 34 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஆக அதிகமான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 18 பிரிவுகளின்கீழ் மொத்தம் 866 பேர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். விழாவில், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா முதல் அங்கத்திலும் நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங் இரண்டாம் அங்கத்திலும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சட்டம், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குச் சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று இந்திராணி கூறினார். சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குச் சிங்கப்பூர் இந்திய இளையர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமென்றும் அவர்களிடையே சமூகச் சேவை, பரிவு, நேர்மை ஆகிய விழுமியங்களை விதைப்பது முக்கியமென்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடக்கப்பள்ளி முதல் இளநிலைப் பட்டக்கல்வி வரையிலான மாணவர்களுக்குக் கல்விசார் விருதுகளுடன் $150லிருந்து $500 வரையிலான ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.