📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 11:00 AM

வடலுாரில் நிரந்தர ஜோதி ஸ்துாபி தமிழ் சங்கம் வலியுறுத்தல்

வடலுாரில் நிரந்தர ஜோதி ஸ்துாபி தமிழ் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ‘‘வடலுாரில் நிரந்தர ஜோதி ஸ்துாபி அமைக்க வேண்டும்,’’ என, அசாம் தமிழ்ச்சங்க நிறுவன தலைவர் தங்க.காமராசு பேசினார்.

டில்லி தமிழ் சங்கத்தில், பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கம் நினைவு வள்ளலார் அறக்கட்டளை சார்பில், வள்ளலார் விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில், ‘வள்ளலார் ஓர் உலக ஞானி” என்ற தலைப்பில், தங்க காமராசு, இளங்கோவன் கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து வழங்கிய, திருவருட்பா சார்ந்த இசை சொற்பொழிவு நடந்தது.

அப்போது, தங்க.காமராசு பேசியதாவது:

அருட்பிரகாச வள்ளலாராக அறியப்படும், ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த, கடலுார் மாவட்டம் மருதுார், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளை, புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும். வடலுார் தர்மச்சாலையில், அணையாமல் எரியும் வகையில், நிரந்தர ஜோதி ஸ்துாபி அமைக்க, மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், டில்லி தமிழ் சங்கத் தலைவர் சிவபாலமுருகன், பொதுச்செயலர் சத்யா அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இசை சொற்பொழிவுக்கு, ரகுராமன் கோவிந்தராஜன் புல்லாங்குழல், அண்ணாதுரை வயலின், வெற்றிபூபதி மிருதங்கம், ஸ்ரீராம் கடம் வாசித்தனர்.