📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 08:04 PM

வரும் 28ஆம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர ஏற்பாடு: பொதுமக்கள் அவதி

வரும் 28ஆம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர ஏற்பாடு: பொதுமக்கள் அவதி

வரும் 28ஆம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர ஏற்பாடு: பொதுமக்கள் அவதி

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கான அவசர ஏற்பாடுகள் செய்யப்படுவதால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் விஜய் வருகின்ற 28ஆம் தேதி, 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்திற்காக முதலில் உசிலம்பட்டியிலுள்ள அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, முதல்வர் அங்கு செல்லும்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்ற அச்சத்தினாலும் உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் ஏற்பாடுகள் அவசர அவசரமாகத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கிறார்கள். மருத்துவமனையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும், தற்போது இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அவசர கதியில் தொடங்கப்பட்டு வருகின்றன.