📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 12, 2026 08:32 AM

விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்

விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்

'பத்திரிகை பணி என்பது, தொழில் அல்ல; அது உண்மையை பாதுகாக்கப் போராடும் தர்ம யுத்தம்' என, துணை ஜனாதிபதி, சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?

துணை ஜனாதிபதி சி..பி.ராதாகிருஷ்ணன், 'தினமலர்' நாளிதழின் நீண்ட கால வாசகர் மற்றும் நலன் விரும்பி. தினமலர் கோட்பாடு குறித்து நன்கு அறிந்தவர். 'உண்மையை பாதுகாக்கப் போராடும் தர்ம யுத்தம்' என்பதை கண்முன்னே இருந்து பார்த்து, அனுபவித்து சொல்லி இருக்கிறார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

தினமும், 'தினமலர்' நாளிதழில் கேள்வி - பதில் வருவதால், தாங்களும் முதல்வர் விஜய் போல், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பணி செய்கிறீர்களா?

தன் மகள் படிப்புச் செலவுக்காக, வெறுங்காலுடன் புடவை அணிந்து, மாரத்தான் போட்டியில் வென்று, 3,000 ரூபாய் பரிசு பெற்ற, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரமாபாய் குறித்து...

'அது தான் தாயுள்ளம்' என, உலகம் முழுதும், ரமாபாயின், 'வீடியோ'வைப் பார்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். தன்னலம் கருதாமல், தங்களின் குழந்தைகளைப் பற்றிய சிந்தனையிலேயே, பிள்ளைகளைப் பெற்றவர்கள் இருப்பர். ரமாபாயும் அத்தகைய தாய்!

புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, திருநெல்வேலியில், களிமண் விதை விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. இதுபோல் மற்ற மாவட்டத்தினரும் களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்யலாமே?

களிமண்ணால் ஆன விதை பிள்ளையார், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் எங்கும் கிடைக்கிறது, ஜெயலெட்சுமி. செயற்கை சாயம் பூசாத, விதை பிள்ளையார்களை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டில் வியாபாரம் செய்ய மீண்டும் அழைப்பது சரியா சார்?

முன்பு, வெகுளித்தனமாக இருந்த இந்தியர்களை அடிமைப்படுத்த, பிரிட்டிஷாருக்கு வசதியாக இருந்தது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் நாம், ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கைகளையும் தான் உன்னிப்பாக கவனித்து வருகிறோமே! மத்திய, மாநில அரசுகள், பிரிட்டன் மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்தும் முதலீடுகளை ஈர்த்து, பாதுகாப்பான வளர்ச்சியை நோக்கி செல்வதால், பயப்பட வேண்டாம்; விரைவில் வல்லரசாகி விடுவோம் பாருங்கள்!

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசும்போது செய்த உடல்மொழி செய்கை குறித்து?

முதல்வர் விஜய், சட்டசபை மாண்பை மீறியதாக தெரியவில்லை. அவரின் அன்றைய தி.மு.க., மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்ல முடியாமல், உடல் மொழிக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க.,வினர் விவகாரத்தை மடை மாற்றுகின்றனர்.