விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை கோவை
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இதனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஈரோடு, திருப்பூர் வழியாக சென்னை சென்ட்ரல்-கோவை போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல்-போத்தனூர் (வண்டி எண்: 06023) சிறப்பு ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு காலை 6.58 மணிக்கு வந்து 7 மணிக்கு புறப்படும்.
போத்தனூர்-சென்னை சென்ட்ரல் (வண்டி எண்: 06024) சிறப்பு ரயில் வருகிற 14ம் தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு நள்ளிரவு 12.08 மணிக்கு வந்து 12.10 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.