📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 09, 2026 10:03 AM

வைபவ் சூர்யவன்ஷிக்கு கபில் தேவ் வார்னிங்.. "வினோத் காம்ப்ளியை மறந்துவிடாதீர்கள்" என அறிவுரை

வைபவ் சூர்யவன்ஷிக்கு கபில் தேவ் வார்னிங்.. "வினோத் காம்ப்ளியை மறந்துவிடாதீர்கள்" என அறிவுரை

வைபவ் சூர்யவன்ஷிக்கு கபில் தேவ் வார்னிங்.. "வினோத் காம்ப்ளியை மறந்துவிடாதீர்கள்" என அறிவுரை

மும்பை: இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இப்போதே அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடுவதைத் தவிருங்கள் என்று முன்னாள் உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் எச்சரித்துள்ளார். 2026-ஆம் ஆண்டில் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசிய இவர், 2026 ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இள வயது விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், வினோத் காம்ப்ளியின் சரிவைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். "வைபவிடம் அசாத்திய திறமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்போதே அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றிவிடாதீர்கள். கிரிக்கெட்டில் அபார திறமையுடன் அறிமுகமாகி, பின்னர் காணாமல் போனவர்கள் பலர் உள்ளனர். அதற்கு வினோத் காம்ப்ளி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

வைபவுக்கு இன்னும் 3 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள். அதன்பின் பேசலாம். வயது ஏறும்போது அவரது வாழ்க்கை முறை மாறும், சிந்தனையும் மாறும். அந்த மாற்றங்களை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். தற்போதைய அதிரடியை விட அவரது பக்குவமே மிக முக்கியம்" என்று கபில் தேவ் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தில் சிக்கி வருவது குறித்துப் பேசிய கபில் தேவ், நீண்ட இடைவெளி எடுக்காமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவால் காயங்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜஸ்பிரித் பும்ராவைப் பாராட்டிய கபில் தேவ், விநோதமான பந்துவீச்சு முறையைக் கொண்டு அனைவரது கணிப்புகளையும் பொய்யாக்கி உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக பும்ரா சாதித்து இருக்கிறார் என்று கூறினார்.