📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 27, 2026 06:03 AM

வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை

வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை

தர்மபுரி மாவட்டம் பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தங்கவேல் (48 வயது). இவர், அந்த பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. ஆசிரியர் தங்கவேல் மாணவியின் பிறந்தநாளுக்கு பரிசுகள் வாங்கி கொடுத்து, பின்னர் வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கவேலை போலீசார் நேற்று கைது செய்தனர்.