📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 15, 2026 05:04 PM

உடன்குடியில் அரிவாள்களுடன் சுற்றித் திரிந்த 3 வாலிபர்கள் கைது

உடன்குடியில் அரிவாள்களுடன் சுற்றித் திரிந்த 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள்களுடன் சுற்றித் திரிந்த வாலிபர்கள்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஜார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

3 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் சக்திவேல் (வயது 19), உடன்குடி புதுமனை பகுதியைச் சேர்ந்த ராபின்சன்(22) மற்றும் மரியம்மாள்புரத்தைச் சேர்ந்த சாந்தகுமார்(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், 3 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.