📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 15, 2026 10:01 PM

உலக அரங்கில் தமிழ் மண்ணின் வாசம் வீசும் பவானி மசாலா

உலக அரங்கில் தமிழ் மண்ணின் வாசம் வீசும் பவானி மசாலா

பவானி மசாலா பொருட்களால் உலக அரங்கில் தமிழ் மண்ணின் வாசம் வீசுகிறது என, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயசங்கர் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவையை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கடலுாரைச் சேர்ந்த பவானி மசாலா நிறுவனம் தனது தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. 2009ம் ஆண்டு துவங்கிய இந்நிறுவனம், தரமான உணவுப் பொருட்கள் தயாரிப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் மூலம் உணவுத் துறையில் வளர்ந்து வருகிறது.

எனது துணைவியார் ஜோதிலட்சுமி, இந்நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். கடலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் சாம்பார் பொடி, ரசப்பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மீன் குழம்பு மசாலா, மிளகாய்த்துாள், மஞ்சள் துாள், கொத்தமல்லித்துாள் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. புளி, காபித்துாள், சிறுதானிய மாவுகள் மற்றும் பிற உணவுப் பொருட்களும் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் இடம் பெற்றுள்ளன. மூலப்பொருள் தேர்வு முதல் தயாரிப்பு, சேமிப்பு, தரக்கட்டுப்பாடு வரை ஒவ்வொரு நிலையிலும் உணவுப் பாதுகாப்புக்கும், தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எங்கள் நிறுவன தயாரிப்புகள் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, செஷல்ஸ், துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சொந்த வணிகப் பெயரில் தயாரிப்புகளை விற்பனை செய்வதுடன், பிற நிறுவனங்களுக்கான ஒப்பந்தத் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும், உறைநிலை உலர்த்தும் தொழில்நுட்பத்தின் மூலம் பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள் மற்றும் புதிய சிற்றுண்டி பொருட்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், சர்வதேச சந்தைகளில் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அதன் வளர்ச்சித் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

தொழில் நடவடிக்கைகளுடன் இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், வணிக அனுபவங்களைப் பகிர்தல், புதிய தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் புதுச்சேரி மண்டலத் தலைவர், இளம் தொழில் முனைவோர் மையத்தின் செயலாளர் மற்றும் ரோட்டரி இயக்கத்தின் உதவி ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புகள் வாயிலாகவும் செயல்பட்டு வருகிறேன்.

கல்வி ஊக்குவிப்பு, சமூக நலத்திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் பங்களிப்பு செய்துள்ளேன். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், தயாரிப்புகளின் வகைகளை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன் வாயிலாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிப்பதே நிறுவனத்தின் நோக்கம்.

தமிழகத்தின் பாரம்பரிய உணவு சுவையை நவீன உற்பத்தி முறைகளுடன் இணைத்து, சர்வதேச சந்தைகளில் மேலும் விரிவான இடத்தைப் பெறும் முயற்சியில் பவானி மசாலா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.