'டோரதி' ஆன்லைன் விமர்சனம்: கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான படைப்பில் ரிஷிகாந்த் நடிப்பு எப்படி?
'டோரதி' ஆன்லைன் விமர்சனம்: கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான படைப்பில் ரிஷிகாந்த் நடிப்பு எப்படி?
கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியுள்ள ’டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Published : September 25, 2026 at 1:37 PM IST
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படம் அவரது துணிச்சலான படைப்பாக, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
டோரதி திரைப்படம் குறித்து ஆன்லைன் விமர்சகர் லட்சுமிகாந்த் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “டோரதி படத்தின் முதல் பாதி, கிராமத்து கதையாக திரைக்கதை மெதுவாக தொடங்குகிறது. கார்த்திக் சுப்புராஜின் மிகவும் எதார்த்தமான திரைப்படம். கிர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் சிறிய அளவில் இருந்தாலும் கதையில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
இளையராஜாவின் கல்யாண விருது பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், இரண்டு நண்பர்களுக்கு இடையேயான பிணைப்புடன், சில எதார்த்தமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. படத்தின் இரண்டாம் பாதி துணிச்சலான சமூகக் கருத்துக்களை கொண்டுள்ளது. நடிகர் சனந்த் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.
#Dorothy First Half Review 🍿 - A Slow yet Steady Rural Drama so far, with a very compelling execution from #KarthikSubbaraj..🤝- His Most Grounded and Realistic film yet.. And he has executed it really well..👍- #Rishikanth and #Sananth's Performances..👌- #KeerthySuresh's… pic.twitter.com/1yGgtpqFnm
நடிகர் ரிஷிகாந்த் நடிப்பும் சிறப்பாக உள்ளது. ரோடு டிராமாவாக LGBTQ சமூகம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வரும் காட்சிகள் மெதுவான திரைக்கதையுடன் யூகிக்கும் வகையில் உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் கவரும்படியாக இல்லை. இப்படம் கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான முயற்சி. டோரதி திரைப்படம் திருப்பங்கள் நிறைந்த துணிச்சலான கதைக்கருவை கொண்டுள்ளது. சுமாரான திரைப்படமாக அமைந்தது” என கூறியுள்ளார்.
#Dorothy Second Half Review 🍿:- A Raw and Rustic Rural Drama in the First Half, followed by a Bold and Message Oriented Second Half..✌️- #Sananth Steals the show with his performance..🤝 Especially in the single shot scene and some scenes in the Second Half..👍- #Rishikanth… pic.twitter.com/PRpObWQYXP
டோரதி படம் குறித்து தனியார் ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “ரிஷிகாந்த், சனந்த், மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் சிறப்பான நடிப்புடனும், சுவாரஸ்யமான கிராமத்து கதைக்களத்துடனும் டோரதி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா உணர்வுப்பூர்வமான பின்னணி சையை வழங்கியுள்ளார்.
#Dorothy Review: The film is an intriguing rural saga powered by compelling work from Rishikanth, Sananth, & @KeerthyOfficial. @karthiksubbaraj crafts a layered narrative with raw emotion and shifting perspectives elevated by Ilaiyaraaja’s soulful score. The major genre turn in… pic.twitter.com/LWDJ4zqQMq
டீசர் மற்றும் டிரெய்லரில் படத்தின் மையக்கரு பற்றி எந்தவித காட்சிகளும் இடம்பெறாத நிலையில், டோரதி படத்தின் இரண்டாம் பாதி திருப்பங்களுடன் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இப்படம் கார்த்திக் சுப்புராஜின் தனித்துவமான படைப்பு” என கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் குறித்து மற்றொரு தனியார் ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “கார்த்திக் சுப்புராஜின் துணிச்சலான மற்றும் வழக்கத்திற்கு மாறான திரைப்படம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. இரண்டாம் பாதி கதை முற்றிலும் மாறுபட்டு, LGBTQ சமூகம் குறித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
#Dorothy (A) – A BOLD & UNCONVENTIONAL Film From Karthik Subbaraj.1st Half Is Engaging & Entertaining, Ending On A Serious Note With The Interval Block. 2nd Half Takes A Completely Different Route, Bringing Strong LGBTQ Elements Into The Story.Both Sananth & Rishikanth…
நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் விருதுகள் பெறும் அளவிற்கு நடிப்பை வழங்கியுள்ளனர். இளையராஜா இசை படத்தில் மற்றொரு சிறப்பம்சம். கிளைமாக்ஸ் ஒரு சில பேருக்கு மகிழ்ச்சி தரும், ஒரு சிலருக்கு அதிர்ச்சி அளிக்கும். அந்த வகையில், பல எதிர்ப்புகள் பெற வாய்ப்புள்ளது. டோரதி திரைப்படம் பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கும்” என கூறப்பட்டுள்ளது.