📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 09:01 AM

TNUEF seeks sanitation engineering departments as 6 workers die in 10 days

TNUEF seeks sanitation engineering departments as 6 workers die in 10 days

CHENNAI: Six sanitary workers died in suspected toxic gas incidents in Tamil Nadu over the past 10 days, prompting the Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF) to urge the state government to establish sanitation engineering departments in higher education institutions to prevent such deaths.

In the latest incidents, three workers died and another was hospitalised in separate accidents in Chennai on October 12.

Asmath Basha (38), from Periya Hasthinapuram in Arcot, Ranipet, and Naveenkumar (34), from West Tambaram, died after inhaling toxic gas while repairing a faulty electric motor in a 20-foot-deep well built for a stormwater drain pump in Kodungaiyur, under the Perambur constituency. Sewage that had entered the rainwater collection structure from nearby drains is suspected to have generated the gas.

In a separate incident on Veerasamy Street in Pallikaranai, Kesavan (29), from Nelli village in Chengalpattu district, died after inhaling toxic gas while cleaning a sewage tank at a house belonging to a woman named Aishwarya. Rajesh (49), a resident of the same locality who was working with him, is undergoing treatment at a private hospital.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 6 மலக்குழி மரணங்கள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்கிடுக, தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாத்திடுக. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்! சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூரில், மழைநீர் வடிகால் பம்புக்காக அமைக்கப்பட்ட சுமார் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரிய ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த அஸ்மத் பாஷா (38), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த நவீன்குமார் (34) ஆகிய இரு தொழிலாளர்களும் 12.10.2026 அன்று விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மழைநீர் சேமிப்புத் தொட்டியில் சுற்றுப்புறக் கால்வாய்களில் இருந்து கழிவுநீர் கலந்து தேங்கியிருந்ததால் விஷவாயு உருவாகியுள்ளது. இதில் சிபிஐ(எம்), ததீஒமு தலைவர்கள் ஏ.விஜயகுமார், வி.ஜானகிராமன், எம்.ராஜ்குமார் ஆகியோர் தலையீடு செய்து தலா ரூ.30 லட்சம் இழப்பீடு பெற்று தந்தனர். இதேபோன்று, சென்னை பள்ளிக்கரணை வீராசாமி தெருவில் ஐஸ்வர்யா என்பவரின் வீட்டு கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (49), செங்கல்பட்டு மாவட்டம், நெல்லி கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (29) ஆகியோர் 12.10.2026 அன்று ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் கேசவன் உயிரிழந்துள்ளார். உடன் பணியாற்றிய ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 02.10.2026 அன்று அரியலூர் மாவட்டம், செந்துறை காந்திநகரில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செந்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (48), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் (60), பாஸ்கர் (45) ஆகிய 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் எம்.இளங்கோவன், கோவி.வெற்றிச்செல்வன், எஸ்.ரேணுகா, பி.பத்தாவதி, அருணாச்சலம் ஆகியோர் 2 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னரே உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை பள்ளிக்கரணை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 4 மரணங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. இவ்வாறு, தமிழக முதல்வரின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள கொடுங்கையூர், பள்ளிக்கரணை, அரியலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்குள் 6 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள துயரம் நிகழ்ந்துள்ளன. கழிவுநீர்த் தொட்டிகள், செப்டிக் டேங்குகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படாததன் விளைவாகவே இத்தகைய உயிரிழப்புகள் தொடர்கின்றன. இத்தகைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இத்தகைய மரணங்களை தடுத்து நிறுத்திட கழிவுநீர் மேலாண்மை, பாதுகாப்பான துப்புரவுப் பணிகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவை அவசியமானதாகும். எனவே உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவுப் பொறியியல் (Sanitation Engineering) துறையைத் தொடங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். #ManualScavenging #StopManualScavenging #SanitationEngineering #WorkersSafety #TNUEF #CPIM #SocialJustice #SaveWorkersLives #TNGovt

Earlier, on October 2, three workers—Ramachandran from Senthurai in Ariyalur and Bhaskar and Dinakaran from Tiruvarur—died after inhaling toxic gas while constructing a septic tank in Gandhi Nagar, Senthurai.

The TNUEF said a case under the appropriate legal provisions was registered only after its leaders and those of the CPM protested.

It demanded compensation of Rs 30 lakh for each of the families of the four workers who died in the Pallikaranai and Ariyalur incidents, along with government employment for one member of each affected family, in accordance with a Supreme Court ruling.

Urging the government to establish sanitation engineering departments in higher education institutions, TNUEF state president T Chellakannu and general secretary P Sugandhi said specialised training and modern technological interventions were essential to prevent workers from being exposed to toxic gases and hazardous working conditions.