தவெக குதிரைபேரம்; கவர்னரிடம் அதிமுக புகார்
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 15 பேர் தவெகவுக்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். குதிரைபேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, தவெக அரசு மீது அதிமுக சார்பில் கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; குதிரை பேரம் தொடர்ந்து நடந்து வருவதற்கு, மூத்த அமைச்சர் கொடுத்த பேட்டி, அறிக்கையை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். குதிரை பேரத்தை செய்து கொண்டுள்ள அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்துள்ளோம்.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, ராஜினாமா செய்தவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர், தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீதும், இன்று கொடுக்கப்பட்ட மனுவின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். கவர்னரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து மனு கொடுப்போம். நடவடிக்கை எடுக்க கால தாமதமானால் சட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.