📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 08:01 PM

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம்!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம்!

தமிழக மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, என்.ஐ.ஏ-வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேசவிரோத சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

செயலிழந்த காவல் மற்றும் உளவுத்துறை

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தஞ்சாவூர் மற்றும் கோவையில் என்.ஐ.ஏ (NIA) அமைப்பால் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த கொடூர பயங்கரவாத அமைப்பான ‘ஷாசாத் பட்டி நெட்வொர்க்’குடன் நேரடித் தொடர்பு இருப்பது அம்பலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாத சக்திகளும், சமூக விரோதக் கும்பல்களும் தமிழகத்திற்குள் இந்த அளவிற்குப் பெருமளவில் ஊடுருவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது, மாநிலத்தில் உளவுத்துறையும் காவல்துறையும் முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது.

குறிப்பாக, விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போது 'குண்டு வெடிக்கும்' எனப் பகிரங்கமாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும், முக்கிய வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து நாசவேலைகளுக்குத் திட்டமிட்டு உளவு பார்த்ததும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்குப் படுமோசமாகச் சீர்குலைந்து போயுள்ளது என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்

சட்டம் - ஒழுங்கு மற்றும் காவல்துறையைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய், இந்த ஒட்டுமொத்தப் பாதுகாப்புத் தோல்விக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரம் தன் கையில் இருந்தும் இத்தகைய அபாயகரமான ஊடுருவல்களைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனப் போக்கிற்கு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, என்.ஐ.ஏ-வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேசவிரோத சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.