த்ரிஷாவை சீண்டிய திவ்யா சத்யராஜ்.. குடும்பத்தை பிரிக்க முடியாது.. முதல்வர் மகனுக்கு வாழ்த்து!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜேசன் சஞ்சய்: படம் தொடர்பான விளம்பர நிகழ்வுகளிலும், யூடியூப் நேர்காணல்களிலும் ஜேசன் சஞ்சய் பேசிய விதம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அப்பா விஜய்யை போலவே மிகவும் எளிமையாகவும், எதார்த்தமாகவும், எந்த இடத்திலும் தனது பெற்றோரை விட்டுக் கொடுக்காமல் அவர் பேசிய பேச்சு சோஷியல் மீடியாவில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
திவ்யா சத்யராஜ் பதிவு: இந்நிலையில், பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஜேசன் சஞ்சய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். அதில், ஜேசன் சஞ்சய்யின் சமீபத்திய பேட்டிகளை நான் பார்த்தேன். அவர் மிகவும் எளிமையாகவும், அதேசமயம் எதார்த்தமாகவும் தன் கருத்துகளை பதிவு செய்திருந்தார். அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புறேன். ஒரு அழகான, பலமான குடும்பத்தை வெளியில் இருந்து வரும் நபர்களால் ஒருபோதும் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுடைய 'சிக்மா' படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பேசி உள்ளார்.
கவனம் ஈர்த்த பதிவு: கடந்த சில நாட்களாக முதல்வர் விஜயின் தனது குடும்பத்தை பிரிந்ததற்கு, மனைவி, குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு காரணம் த்ரிஷா தான் என்று பல விதமான செய்திகள் இணையத்தில் த்ரிஷா குறித்தும் விஜய் குறித்து பரவி வரும் நிலையில், திவ்யா சத்யராஜ் த்ரிஷாவை மறைமுகமாக தாக்கி வெளியில் இருந்து வரும் நபர்களால் பிரிக்க முடியாது என சொல்லி இருப்பது, தளபதி ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)