📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 14, 2026 11:01 AM

தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை என்ன தெரியுமா ? வெளியான விலை நிலவரங்கள்

தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை என்ன தெரியுமா ? வெளியான விலை நிலவரங்கள்

இந்த மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பெரிதாக இல்லை என்பதால் தங்கம் விலை கிடுகிடுவென குறையும் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததை போல தங்கம் விலை குறையவில்லை. தங்கம் விலை குறைவதும் பின்பு அதிகரிப்பதாகவும் இருந்து வந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை கிராமிற்கு 35 ரூபாய் சரிந்தது. இதனைத்தொடர்ந்து இன்றும் ஆபரண தங்கத்தின் விலை சரிந்து இருக்கின்றது. அதே போல தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளதுஆபரண தங்கம் விலைநேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை முந்தைய நாள் விலையை விட 35 ரூபாய் சரிந்து 13,685 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று மேலும் 95 ரூபாய் குறைந்து 13,590 ரூபாயாக உள்ளது. கடந்த பத்து நாட்களில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை குறைந்து 13,590 ரூபாய்க்கு வந்துள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 108,720 ரூபாயாக இருக்கின்றதுதூய தங்கம் விலைஆபரண தங்கத்தை போல தூய தங்கத்தின் விலையும் குறைந்து வருகின்றது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 14,929 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 96 ரூபாய் வரை குறைந்து 14,825 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை 118,600 ரூபாயாக உள்ளதுவெள்ளி விலைவெள்ளி விலையில் வழக்கம் போல எந்த மாற்றமும் இல்லை. கடந்த பத்து நாட்களுக்கு மேல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 245 ரூபாயாக இருந்து வரும் நிலையில் இன்றும் அதே விலையில் தான் உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 245,000 ரூபாயாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது