📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 09, 2026 02:03 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: சென்னையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 815 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், சவரனுக்கு

400 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று

தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 815 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.