📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 07:03 PM

தமிழ்ப்பெண்ணை மணந்து சட்டவிரோதமாக குடியேறினார்: வங்கதேசத்தை சேர்ந்தவர் சென்னையில் கைது

தமிழ்ப்பெண்ணை மணந்து சட்டவிரோதமாக குடியேறினார்: வங்கதேசத்தை சேர்ந்தவர் சென்னையில் கைது

தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறி தமிழ்ப் பெண்ணை மணந்து, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டும் வாங்கிய வங்கதேச நாட்டை சேர்ந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்த வங்கதேசக்காரர்

கைது செய்யப்பட்ட அந்த வங்கதேசக்காரரின் பெயர் கமில் போக்ஸ் (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு மேற்குவங்காளம் மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். அங்கிருந்து தமிழகத்துக்கு வந்தார். தமிழ்ப் பெண்ணான தாயிபாபேகம் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் மனைவியோடு திரிபுரா மாநிலத்திற்கு சென்றார்.

வேலைக்காக வந்தவர்

தமிழகத்திலும், திரிபுராவிலும் பல்வேறு வேலைகளை செய்தார். வேலை தேடி வந்தவர். இந்தியாவிலேயே நிரந்தரமாக குடியேறினார். தனது பெயர், பிறந்த இடம் அனைத்தையும் போலியாக மாற்றி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை திரிபுரா மாநிலத்தில் வாங்கினார். அதன்மூலம் இந்திய பாஸ்போர்ட்டும் பெற்றார். பாஸ்போர்ட்டை பெற்ற அவர், ஐக்கிய அரபு நாட்டிற்கு சென்று வேலை செய்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாட்டில் வேலை செய்து வந்த அவர், கடந்த 14-ந் தேதியன்று விமானத்தில் சென்னை வந்தார். அப்போது, குடியுரிமை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவருடைய சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

குடியுரிமை அதிகாரிகள் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டு வாங்கிய குற்றத்திற்காகவும், சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 18 ஆண்டுகளாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறி பல்வேறு சலுகைகளையும் கமில் போக்ஸ் அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினர் திரிபுரா மாநிலத்தில் வசிப்பதாக தெரிகிறது. அவர் சென்னை வந்து திரிபுரா மாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.