📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 03:00 PM

தமிழ்நாட்டில் இன்று பலமாவட்டங்களில் கனமழை வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பலமாவட்டங்களில் கனமழை வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பலமாவட்டங்களில் கனமழை வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மாற்றங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. தற்போது நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று (28-09-2026) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் வானிலை அமைப்பு :

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் தமிழ்நாடு வரை தெற்கு உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

இன்று (28-09-2026) கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீதமுள்ள தமிழ்நாட்டின் பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை முன்னறிவிப்பு :

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.

இருப்பினும், சில இடங்களில் வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது. செப்டம்பர் 28 முதல் 30 வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம் :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (28-09-2026) மற்றும் நாளை (29-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

வங்கக்கடல் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.