📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 09, 2026 07:00 PM

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

நவநீதம் பிள்ளை

ஓஸ்லோ: சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நார்வேயின் ஓஸ்லோ நகரில் இன்று வெளியிடப்பட்டது.

"அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக நவநீதம் 'நவி' பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது" என்று அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்தது.