தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் பிரசாரம்: 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
சென்னை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், த.வெ.க., வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் நாளை (செப் 30) பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக, தாராபுரத்தில், சித்ராவுத்தன்பாளையம் பகுதியில், நாளை மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். கூட்டத்தில், 10 ஆயிரம் பேரை அனுமதிக்கும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, 'கியூ ஆர்' குறியீட்டுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரசார கூட்டத்தில் பங்கேற்க, சென்னையில் இருந்து தனி விமானத்தில், நாளை காலை கோவைக்கு முதல்வர் விஜய் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக, பிரசார திடலுக்கு சென்று, பிரசாரத்தை முடித்து விட்டு, நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
சிறப்பு வீடியோ!
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் பிரசாரம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://www.youtube.com/live/fYhAhxX02Og?si=sc_5Va3U_W1_JG1E