📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 01:03 PM

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது

டெல்லி: டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவிலியிலுருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தைத் தடுக்க இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவகாரங்களை மையமாகக் கொண்டு தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரி பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து இளைஞர்கள் மற்றும் சிஜேபி ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்கின்றனர். டெல்லியில் இணைய சேவைகளை தற்காலிகமாக முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் ஜன்பத் - கர்த்தவ்யா பாதை பகுதியைச் சுற்றி 4 கிமீ சுற்றளவில் மொபைல் இணைய சேவைகள் நேற்றிரவு 10 மணி முதல்இன்றிரவு 10 மணி வரை முடக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இன்று போராட உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அனுமதி மறுப்பை மீறி காலையிலேயே ஜந்தர் மந்தரில் கூடிய இளைஞர்களை காவலர்கள் கைது செய்தனர். டெல்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் 45 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் 33,000 பாதுகாப்புப் படையினர் குவித்துள்ளனர். இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தைத் தடுக்க இதுவரை போலீசார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.