📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 15, 2026 07:01 PM

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு

புதுடெல்லி,

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதன் 'எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ஜெய்ப்பூரில் நடந்த தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் (டி பிரிவு) 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மஹிபால் லோம்ரோர் 84 ரன்கள் சேர்த்தார். தமிழகம் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 23 ஓவர் களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. சாய் சுதர்சன் 26 ரன்னுடனும், என்.ஜெகதீசன் 45 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் 3 புள்ளியை தனதாக்கியது. தமிழ்நாடு ஒரு புள்ளி பெற்றது.