📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 07:31 PM

ரீல்ஸ், ரீல் விடுவதே மிகப்பெரிய சாதனை: தவெக ஆட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி

ரீல்ஸ், ரீல் விடுவதே மிகப்பெரிய சாதனை: தவெக ஆட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி

தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய் அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருந்தால் துறைசார்ந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றிருப்பார் விஜய்.

முதலீட்டை ஈர்க்கும் பயணமா, இன்பச்சுற்றுலா சென்றாரா என மக்கள் கேட்கும் நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்சனைக்கு சட்டப்பேரவையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு. அமைச்சர்களைக் கேட்டால் மின்வெட்டு இல்லை என கூறுகின்றனர்.

மின்வெட்டு இல்லை என்றால் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் ஏன்? மக்களின் தூக்கத்தைத் தொலைத்து விட்டது தவெக அரசு. நிர்வாகத் திறமையின்மையே மின்வெட்டுக்கு காரணம்.

மின்வெட்டால் மக்கள் போராட்டம்

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது அரசு. கடன் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு?

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தவெக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை 25 சதவீதம் உயர்வு.

ரீல்ஸ், ரீல் விடுவதே தவெக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது

திமுக-அதிமுக இடையே கள்ள உறவு என்பது அபத்தம். தவெகவினருக்கு எதுவும் தெரியவில்லை.

திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல், தேவையற்ற தேர்தல் என தெரிவித்தார்.