📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 13, 2026 10:34 AM

"பும்ராவுக்கு ஸ்பெஷல் பிளான் இருக்கு".. இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் கேப்டன்

"பும்ராவுக்கு ஸ்பெஷல் பிளான் இருக்கு".. இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் கேப்டன்

"பும்ராவுக்கு ஸ்பெஷல் பிளான் இருக்கு".. இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் கேப்டன்

டெல்லி: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறவுள்ள நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை சமாளிக்கத் தங்களிடம் வலுவான திட்டம் உள்ளதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் கூறி இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இப்ராஹிம் சத்ரான், "பும்ரா உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர். எனக்கு மிகவும் பிடித்தமான வீரர். அவரை எதிர்கொள்வதற்காக நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம். விஷயங்களைச் சிக்கலாக்காமல் எளிமையாக அணுகி, பும்ரா மற்றும் இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது" என்றார்.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய அவர், "அவர் ஒரு அற்புதமான திறமைசாலி. ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக விளையாடிய எங்கள் அணி வீரர்களிடம் இருந்து பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளோம். அவரது பேட்டிங் வீடியோக்களையும் தீவிரமாக ஆய்வு செய்து, சரியான நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

இந்திய ஆடுகளங்கள் தங்களுக்கு மிகவும் பரிச்சயமானது என்று குறிப்பிட்ட சத்ரான், "நாங்கள் இந்தியாவில் உலகக் கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடந்த 2024-ல் பெங்களூருவில் 2 சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியாவுக்குக் கடுமையான சவால் அளித்தோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் காயங்கள் ஏதுமின்றி முழு உடற்தகுதியுடன் உள்ளனர்" என்றார்.

ரஷித் கானுக்குப் பதிலாக டி20 கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள இப்ராஹிம் சத்ரான், புதிய பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸின் வழிகாட்டுதலில் அணி சிறப்பாக முன்னேறி வருவதாகவும், இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற முழு முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்த தொடரில் மொத்தம் மூன்று டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரை இந்தியாவில் நடத்துகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த மூன்று போட்டிகளும் நடைபெற உள்ளன.