📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 11:04 AM

புகைமூட்டப் பிரச்சினையில் இந்தோனீசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயார்: அமைச்சர் கிரேஸ் ஃபூ, சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டப் பிரச்சினையில் இந்தோனீசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயார்: அமைச்சர் கிரேஸ் ஃபூ, சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் இந்தோனீசியாவிற்கு உதவ சிங்கப்பூர் தயாராக இருக்கிறது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தோனீசிய அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“எங்கள் அண்டை நாடான இந்தோனீயாவுடன் தொடர்பில் இருக்கிறோம். எல் நினோவால் நமது வட்டாரத்தில் மிகவும் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் காட்டுத்தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது,” என்று சனிக்கிழமை (அக்டோபர் 10) நமது தெம்பனிஸ் நடுவத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஃபூ கூறினார்.

தீயைக் கட்டுப்படுத்த இந்தோனீசியா முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறிய அவர், தங்களால் இயன்ற அளவு உதவ தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தோனீசியாவின் சுற்றுப்புற அமைச்சர் ஜும்ஹுர் ஹிதாயத் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

அதோடு தமது ஆதரவை வழங்கவும் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் திருவாட்டி ஃபூர் கூறினார்.

புகைமூட்டப் பிரச்சினைகளுக்காக வட்டார அளவில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒத்துழைப்பு முயற்சிகளையும் தாம் வரவேற்பதாக அமைச்சர் ஃபூ கூறினார்.

சிங்கப்பூரின் காற்றுத் தரத்தை அளவிடும் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ), அக்டோபர் 9 மாலை 6 மணிக்கு மத்திய வட்டாரத்தில் 192ஐ எட்டியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதுவே, இவ்வாண்டில் இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

இது, 201 என்ற மிக மோசமான ஆரோக்கியமற்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

அக்டோபர் 10ஆம் தேதி காலை நிலவரப்படி சிங்கப்பூரின் காற்றுத் தரம் சற்று மேம்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே நீடித்தது. காலை 9 மணி நிலவரப்படி பிஎஸ்ஐ அளவு: வடக்கு: 124, தெற்கு: 135, கிழக்கு: 156, மேற்கு: 160, மத்திய பகுதி: 174 எனப் பதிவாகியுள்ளது.

சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் விவசாயத்திற்காக நிலங்களைச் சுத்தம் செய்யத் தீ வைக்கப்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.