📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 03, 2026 12:03 AM

பணமழை ரீல்ஸ் வெளியிட்டு 118 பவுன் பறிகொடுத்த பிரபல பெண் யூடியூபர் பாலியல் வழக்கில் கைதானவர்: அதிர்ச்சி தகவல்

பணமழை ரீல்ஸ் வெளியிட்டு 118 பவுன் பறிகொடுத்த பிரபல பெண் யூடியூபர் பாலியல் வழக்கில் கைதானவர்: அதிர்ச்சி தகவல்

பணமழை ரீல்ஸ் வெளியிட்டு 118 பவுன் பறிகொடுத்த பிரபல பெண் யூடியூபர் பாலியல் வழக்கில் கைதானவர்: அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில்: பணமழை ரீல்ஸ் வெளியிட்டு 118 பவுன் பறிகொடுத்த பிரபல பெண் யூடியூபர் பாலியல் வழக்கில் கைதானவர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் வசிக்கும் பிரபல பெண் யூடியூபர் பணமழை மற்றும் கிலோ கணக்கில் நகைகளை போட்டு ரீல்ஸ் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் 118 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சமூக வலை தளம் முழுவதுமே இந்த கொள்ளை வழக்கு பற்றி தான் விவாதிக்கப்படுகிறது. கொள்ளை நடந்த பின் பெண் யூடியூபரின் வீடியோக்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து உள்ளனர். பாலோயர்ஸ் எண்ணிக்கையையும் 5 லட்சத்தை நெருங்கி விட்டது. இதனால் கொள்ளை நடந்த பின் கூட, வழக்கமான முறையில் பணத்தை அள்ளி வீசி வீடியோக்களை வௌியிட்டு அதிர வைத்தார் பெண் யூடியூபர்.

இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நகைகளையும் மீட்டுள்ளனர். ஆனாலும் நகை மீட்பில் இன்னும் குளறுபடிகள் உள்ளன. புகார் அளித்ததை விட கைப்பற்றப்பட்ட நகைகளின் அளவு குறைவாக உள்ளது. இது தொடர்பாக இன்னும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த இளம்பெண் தொடர்பாக தற்போது பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன.

இவர் ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய ஸ்பாவில் பிடிபட்டு, பாலியல் வழக்கில் கைதாகி காப்பகத்தில் அடைக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை அதிகரித்து உள்ளன. காப்பகத்தில் அடைக்கப்பட்டு இருந்த இவரை பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தான் மீட்டுள்ளனர். இவர் ஏற்கனவே ஆலயங்களில் வீடியோக்கள் எடுத்தும் சர்ச்சையில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அனைவரிடமும் தனது சொந்த ஊர் கோவை என்று கூறினாலும், இவர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. ஆரல்வாய்மொழி அருகே இவரின் உறவினர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு கட்டுக்கட்டாக பணம், நகைகள் எப்படி வந்தது? எவ்வாறு பணம் சம்பாதித்தார்? என்பது பற்றி வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.