📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News October 07, 2026 07:04 PM

பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2026-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு விஞ்ஞானிகள் பிரான்ஸின் ஹென்றி பி.ககன், ஜப்பானின் கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நோபல் பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் நேரியல் அல்லாத விளைவுகள் மற்றும் தன்வினையூக்கம்’ (Discovery of non-linear effects and autocatalysis in asymmetric organic synthesis) சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக பிரான்ஸ் விஞ்ஞானி ஹென்றி பி.ககன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி கென்சோ சோய் ஆகியோருக்கு 2026-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து, இன்று வேதியியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வேதியியலின் அடிப்படை அம்சங்கள் தொடர்பானதாகும். பல மூலக்கூறுகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன; என் கைகளைப் போலவே.

அவை ஒன்றையொன்று பிரதிபலிக்கும் கண்ணாடி பிம்பங்களைப் போலவும், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவும் இருந்தாலும், அவை முற்றிலும் ஒன்றல்ல. என் கைகளை ஒன்றன் மீது ஒன்றாகச் சரியாகப் பொருத்த முடியாது. கிரேக்க மொழியில் ‘கை’ என்பதைக் குறிக்கும் சொல்லிலிருந்து பெறப்பட்ட 'கைரல்' (chiral) என்று இத்தகைய மூலக்கூறுகள் அழைக்கப்படுகின்றன” என்று வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹைனர் லிங்க் கூறினார்.

முன்னதாக, நேற்று இயற்​பியலுக்​கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த விஞ்​ஞானி பிரான்சிஸ் ஹேல்சனுக்கு அறிவிக்கப்பட்டது. ஐஸ்​கியூப் நியூட்​ரினோ ஆய்​வகத்​துக்கு முக்​கியப் பங்​களிப்​பு​களை வழங்​கியதற்​காக பிரான்சிஸ் ஹேல்சன் நோபல் பரிசுக்​குத் தேர்வு செய்​யப்​பட்டார்.

அதேபோல, அமெரிக்கா மற்​றும் ஜெர்​மனியைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்​காவை சேர்ந்த கார்ல் டீசெரோத் (54) மற்​றும் ஜெர்​மனியை சேர்ந்த பீட்​டர் ஹெகேமன் (71), ஜார்ஜ் நாகல் (73) ஆகியோ​ருக்கு மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்​கப்​பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு அக்.9-ம் தேதி அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.