📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 10:33 PM

பெரியார் பிறந்த நாள்

பெரியார் பிறந்த நாள்

பெரியார் பிறந்த நாள் - ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

வெளிச்சமற்ற இடம் இருள், கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது என திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Published : September 17, 2026 at 8:39 PM IST

சென்னை: தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சமூக நீதி நாளையொட்டி திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் சமூக நீதி நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து இன்று (செப்டம்பர் 17) மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா ராஜன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ’சமூகநீதி’ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி, "பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதையும், ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.

சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நானே ஒப்படைத்துக் கொள்வேன். மானுட பற்றும், மனிதாபிமானம் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்" என்ற உறுதிமொழியை திமுகவினர் ஏற்றுக் கொண்டனர்.

தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட! வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்! #சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever

அத்துடன், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம். பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட.

வெளிச்சமற்ற இடம் இருள், கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.