பெண்கள் அழுதா தாங்க மாட்டாரு? ஒல்லி நடிகருடன் 'ரகசிய வாழ்க்கை' வாழும் தொகுப்பாளினி!
சென்னை: சினிமா உலகில் வெற்றிகளையும் விருதுகளையும் தாண்டி, திரைக்கு பின்னால் நடக்கும் அந்தரங்க கிசுகிசுக்களுக்கு எப்போதுமே பஞ்சமிருந்ததில்லை. அந்த வகையில், தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி பிரபல டிவி தொகுப்பாளினிக்கும், அந்த ஒல்லி நடிகருக்கும் இடையே இருக்கும் அந்த ரகசிய உறவு தான்.
ஆரம்பமே அமோகம்: பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்த அந்த அழகிய நிகழ்ச்சித் தொகுப்பாளினிக்கு, ஆரம்பமே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் வந்தாதான் அந்த ஷோவே ஹிட் ஆகும் என்று சேனல் நிர்வாகமே நம்பும் அளவிற்கு தனது சிரிப்பாலும், துள்ளலான பேச்சாலும் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர். சாதாரண பிரபலங்கள் முதல் பாலிவுட் ஸ்டார்கள் வரை அனைவரையும் தனது அழகிய பேச்சால் வசீகரித்து பேட்டி எடுத்து, புகழின் உச்சத்தில் வலம் வந்தார்.
ஒல்லி நடிகருடன் சந்திப்பு: இப்படிப் புகழின் உச்சியில் இருந்த அந்த சமயத்தில்தான், அந்த ஒல்லி நடிகரை ஒரு பேட்டிக்காகச் சந்தித்துள்ளார் அந்த தொகுப்பாளினி. அந்த ஒரே ஒரு சந்திப்பு... இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பை உருவாக்க, அதை தொடர்ந்து கிசுகிசுக்களும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கின. அதே காலகட்டத்தில் அந்தத் தொகுப்பாளினிக்கு திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால், ஒல்லி நடிகருடனான கிசுகிசுவால் துவண்டு போன அந்த கணவர் தொடர்ந்து கேள்வி கேட்க கடைசியில் திருமணமான ஒரே ஆண்டிலேயே கணவரைவிட்டு பிரிந்துவிட்டார். மீண்டும் கலங்கிய கண்ணுடன் ஒல்லி நடிகரிடம் தஞ்சம் புகுந்தார்.
மனைவியை பிரிந்தார்: ஆனால், அந்த ஒல்லி நடிகர் தொகுப்பாளினிக்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கல, பெண்கள் கண் கலங்கிவிட்டாதே துடிதுடித்துபோய் ஆதரவு கொடுக்கும் பறந்த மனம் கொண்டவர். இதனால், ஒல்லி நடிகரின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை போய்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இப்போது எந்தவிதமான தொல்லையும் இல்லாமல் ஜாலியாக இருந்து வருகிறார். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெளிநாட்டு டூருக்கு சென்றுவிட்டு, பல நாட்கள் கழித்துத்தான் வருவார்.
ரகசிய உறவு: தொகுப்பாளினியும் விவகாரத்து பெற்று பல வருடங்கள் ஆகியும் யாரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒல்லி நடிகருடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அத்தனை சர்ச்சைகள், கிசுகிசுக்கள் வந்தபோதிலும், அந்தத் தொகுப்பாளினியும் ஒல்லி நடிகரும் தங்களின் நெருக்கமான உறவை முறித்துக் கொள்ளாமல், வெளி உலகிற்கு தங்களைக் காட்டிக்கொள்ளாமல், யாருக்கும் தெரியாமல் அந்த ரகசியப் பந்தத்தை இப்போதும் மெயின்டைன் செய்து வருகிறார்களாம்.