📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 23, 2026 02:03 AM

மதுரைக்கு செப். 28

மதுரைக்கு செப். 28

மதுரை: மதுரைக்கு செப்​டம்​பர் 28-ம் தேதி வருகை தரும் தமிழக முதல்​வர் விஜய், 17 ஆண்​டு​களுக்​குப் பின்பு குட​முழுக்கு விழா நடந்த மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தால், பாது​காப்பு ஏற்​பாடு​களை போலீ​ஸார் தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர்.

உலகப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் 17 ஆண்​டு​களுக்​குப் பின்பு கடந்த 17-ம் தேதி குட​முழுக்கு விழா நடந்​தது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று தரிசனம் செய்​தனர். இதையடுத்​து, செப்​.18 முதல் அக்.2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், அரசு மருத்​து​வமனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்​கான ‘தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம்’ தொடக்க விழா செப்​. 28-ம் தேதி உசிலம்​பட்​டி​யில் நடை​பெறு​வ​தாக இருந்​தது. திடீரென இடம்மாற்​றப்​பட்​டு, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் அதே தேதி​யில் நடை​பெறுகிறது.

இதன் காரண​மாக, மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்​வர் விஜய், மீனாட்சி அம்​மன் கோயி​லிலும் தரிசனம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக அரசு வட்டாரத்தில் கூறப்​படு​கிறது.எனவே, முதல்​வரை வரவேற்​கும் வகை​யில், கோயில் நிர்​வாகம், காவல் துறை சார்​பில் ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

இதுகுறித்து தவெக​வினர் கூறுகை​யில், ‘மீ​னாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா​வின்​போது. முதல்​வர் லண்​டன் பயணம் மேற்​கொண்​ட​தால், அவரால் விழாவில் பங்​கேற்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில், செப். 28-ம் தேதி மதுரைக்கு வரும்​போது, மீனாட்சி அம்​மன் கோயி​லிலும் தரிசனம் செய்ய உள்​ள​தாக முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். எனவே, அ​வரை வரவேற்க நாங்​களும் தயா​ராகி வரு​கிறோம்’ என்​றனர்.

முதன்​முறை​யாக வருகை: ‘முதல்​வ​ரான பிறகு முதன்​முறை​யாக மதுரைக்கு வரு​வ​தால், விமான நிலை​யத்​தில் இருந்து அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை வரை முதல்​வர் வரும் வழித்​தடம் உள்​ளிட்ட நகருக்​குள் அளிக்​கும் பாது​காப்பு குறித்​து, காவல்​துறை அதி​காரி​கள் ஆலோ​சித்து வரு​கின்​றனர்.

மேலும் அவர், மீனாட்சி அம்​மன் கோயி​லிலும் தரிசனம் செய்​வ​தால், பாது​காப்பு ஏற்​பாடு​களை தயார் நிலை​யில் வைக்க உள்​ளூர், வெளியூர்​களில் இருந்து போலீ​ஸாரை வரவழைக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். முதல்​வர் வரு​கைக்​கான அதி​காரப்​பூர்வ தகவல் டிஜிபி அலு​வல​கத்​தில் இருந்து வந்த பின்​பு, மீனாட்சி அம்​மன் கோயி​லில் முழுப் பாது​காப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்’ என காவல்​துறை வட்​டாரம் தெரி​வித்​தது.