மற்ற மாவட்டங்களிலும் கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35
கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
முதற்கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், 2-வது கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
கிலோ 35 ரூபாய்
அதன் தொடர்ச்சியாக, 3-ம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, 3-ம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடம் இருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடி களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று முதல் சென்னையிலும், இன்று முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு விற்பனை செய்யப்ப டும். குடும்ப அட்டைதாரர்கள் வெங்காயத்தை பெற்று பயன்பெறலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொது மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.
புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்
அதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.