📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 11:30 AM

மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு

மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு

சென்னை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, மறைந்த சால்மன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமா என்று அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இன்று நடைபெறும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சாலமன் பாப்பையா: புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்சலி செலுத்தி வரு​கின்​றனர்.

அவரது மறைவையடுத்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைக்கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.