📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 03, 2026 11:03 PM

மனித மாண்புக்கும் பொது நலனுக்கும் செயற்கை நுண்ணறிவு சேவை செய்ய வேண்டும் : கர்தினால் பெர்னாண்டஸ்

மனித மாண்புக்கும் பொது நலனுக்கும் செயற்கை நுண்ணறிவு சேவை செய்ய வேண்டும் : கர்தினால் பெர்னாண்டஸ்

மனித மாண்புக்கும் பொது நலனுக்கும் செயற்கை நுண்ணறிவு சேவை செய்ய வேண்டும் : கர்தினால் பெர்னாண்டஸ்

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

செப்டம்பர் 30, புதன்கிழமையன்று, நம்பிக்கைக் கோட்பாட்டுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அவர்கள், மாட்ரிட்டில் உள்ள கொமிலாஸ் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘மகத்தான மானுடம்’ திருத்தூது மடல் குறித்த ஆய்வு நாளில், மனிதகுலம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்..

“மனிதகுலத்தைப் பராமரித்தல்: இதுவே அடிப்படைச் சிக்கல்” என்று கூறிய கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், மேலும் தீமை, கொடூரம் மற்றும் அக்கறையற்ற தன்மைக்கான மனிதனின் திறன்களை மீறி இந்த மடல் மனிதகுலத்தை “மகத்துவமானது” என்று விவரிக்கிறது என்று வலியுறுத்தினார். மனித வரலாறு மாண்பைப் பாதுகாத்தல், பொது நலனை மேம்படுத்துதல் மற்றும் பலவீனமானவர்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டுகளையும் வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் மனிதகுலத்தை மாற்ற முயலும் மனிதமேம்பாட்டு வாதம் மற்றும் பின்-மனிதவாதம் ஆகிய மனிதனின் எதிர்காலம், தொழில்நுட்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவங்கள் குறித்த கருத்துக்களை வலுப்படுத்தியுள்ளதாக கர்தினால் எச்சரித்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் குறிப்பிடத்தக்க நன்மைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், தொழில்நுட்பமானது மனித மாண்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, சகோதரத்துவம் மற்றும் பொது நலனுக்கு சேவை செய்யும் ஒரு “நிரப்புத்தன்மை” மிக்க பார்வையை அவர் கோரினார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனிதகுலத்தை மாற்றியமைக்க முயலும் மனிதமேம்பாட்டுவாதம் மற்றும் பின்மனிதவாதம் போன்ற, மனிதனின் எதிர்காலம், தொழில்நுட்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தத்துவக் கருத்துகளை வலுப்படுத்தியுள்ளது என்று கர்தினால் எச்சரித்தார்.

பாரம்பரியமாக முன்வைக்கப்படும் ‘நியாயமான போர்’ என்ற கருத்தைத் தாண்டி, சட்டபூர்வமான தற்காப்பு தேவைப்படும் மிகக் கடுமையான சூழல்களில் மட்டுமே படைபலத்தைப் பயன்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

அனைத்துலக இறையியல் ஆணையத்தை மேற்கோள்காட்டி, விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் மிகவும் வறியவர்கள் மீது சமூகம் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.