📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 12, 2026 09:32 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 12 செப். 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 12 செப். 2026

மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர். தொலை நோக்குச் சிந்தனை கூடும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரம் சிறக்கும்.

ரிஷபம்: அடுக்கடுக்காக செலவு வந்தாலும் அதற்கேற்ற வருமானம் உண்டு. சரியான திட்டமிடலுடன் சவாலான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். தம்பதிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் ஆகியவற்றை விற்பனை செய்ய முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்பீர்.

கன்னி: மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பதவிகள் தேடிவரும். புது வேலை அமையும். புது நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

விருச்சிகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்.

தனுசு: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று அதிக லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும்.

மகரம்: குடும்பத்தில் சுபச் செலவு இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆன்மிகப் பயணங்கள் மனதை அமைதிப்படுத்தும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதி மொழி தர வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கும்பம்: உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கவனமாக பேசவும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சாதிக்கும் எண்ணம் கூடும்.

மீனம்: மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அக்கம் பக்கத்தி னரை பகைத்துக் கொள்ளாதீர். விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர் களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும். வியாபாரம் சிறக்கும்.