📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 27, 2026 07:04 PM

Lenin Pandiyan Blue Sattai Maran Review

Lenin Pandiyan Blue Sattai Maran Review

சென்னை: சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், ரோஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லெனின் பாண்டியன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பாலச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் சூழலில்; ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ட்ரெண்டாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது வீடியோவில், "இந்தக் கதையை ஆழமாக சொன்னால் அதில் இருக்கும் சஸ்பென்ஸ் எல்லாம் போய்விடும். எனவே நீங்களே படம் பார்த்தால் புரியும். ஒருநாட்டில் பெரிய பணக்காரனை காப்பாற்றுவதற்காக இந்த சிஸ்டம் எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார்கள். சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பதை அருமையாக காட்டியிருக்கிறார்கள்.

நீதிமன்ற காட்சிகள் எல்லாம் சூப்பராக இருந்தன. நல்ல நீதிபதியிடம் ஒரு வழக்கு சிக்கியது என்றால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்கள். ஜார்ஜ் மரியான் கேரக்டர் மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் அருமை. கதை சீரியஸாக போனாலும் நமக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். இடைவேளை காட்சி அட்டகாசம். நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். நான் சொன்ன இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் முதல் பாதி வரையில்தான்.

இரண்டாவது பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும் சில குழப்பங்களும் இருந்தன. முதல் பாதி அளவுக்கு இல்லை. கங்கை அமரனின் கேரக்டரை ரொம்ப நன்றாக வடிவமைத்திருந்தார்கள். அவரது நடிப்பு சில இடங்களில் கூடுதலாக இருந்தாலும் பல இடங்கள் சூப்பர். ரோஜாவை திருமணம் செய்ததற்கான கதையை சொல்லும் இடமெல்லாம் அட்டகாசம். தர்ஷனும் சூப்பராக நடித்திருக்கிறார். ஹீரோயினும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி இந்தப் படத்துக்கு இளையராஜாவின் பின்னணி இசை பெரிய பலமாக இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாதி எல்லோருக்குமே பிடிக்கும். இரண்டாவது பாதிதான் பிரச்னை. இந்தக் கதைக்கு இது க்ளைமேக்ஸ் இல்லையே என்று தோன்றிவிட்டால் இது உங்களுக்கு சுமாராகத்தான் தெரியும். அந்த க்ளைமேக்ஸ்தான் சரி என்று தோன்றினால் நல்ல படமாகவே தெரியும்.

இது அனைத்தையும் தாண்டி ஒரு முழு படத்தில் நாலு நல்ல சீனைத்தான் எதிர்பார்ப்போம். அதுகூட இல்லாமல்தான் மகுடம், டாக்சிக், பாரடைஸ் படங்களை எடுத்தார்கள். அதை பார்க்கும்போது நீங்கள் எல்லாம் ஏன் படம் எடுக்கிறீர்கள் என்றுதான் தோன்றும். ஆனால் இதில் நான்கு நல்ல சீன்கள் இல்லை. முதல் பாதி முழுவதுமே நல்லாத்தான் இருக்கிறது. இரண்டாவது பாதியில்கூட மாறுபட்ட கருத்துதான் இருக்கிறதே ஒழிய மோசமான படம் இல்லை" என்றார்.