📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 12:34 PM

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுக்கு இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, விஎஸ்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சுதிணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஎஸ் பாபு உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விஎஸ் பாபு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தவெகவினரும் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.