📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 15, 2026 11:03 AM

கள்ளக்குறிச்சியில் கனமழை: குளம்போல் தேங்கிய நீரால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி!

கள்ளக்குறிச்சியில் கனமழை: குளம்போல் தேங்கிய நீரால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி!

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சாலையில் குளம்போல தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் கடுமையான இடியுடன் கூடிய திடீர் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட துருகம் சாலையில் உள்ள நாகல்குடி பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வடிய வழியின்றி சாலையில் குளம்போல் தேங்கியது.

பள்ளி மாணவர்கள் அவதி

இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மற்றும் பள்ளிக்கு சென்ற சிறுவர், சிறுமிகள் இடுப்பளவு தேங்கிய மழைநீரில் மிதித்தபடி கடும் சிரமத்துடன் நடந்து சென்றனர். மேலும், தண்ணீரில் நடக்க முடியாமல் தவித்த ஒரு சிறுமியை, மற்றொரு சிறுவன் பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு சாலையைக் கடக்கும் நெகிழ்ச்சியான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. பிரகாஷ் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆகியோர் நகர நிர்வாகத்தினருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்கள் கோரிக்கை

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தவும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி தண்ணீரை வெளியேற்றவும் நகராட்சி ஆணையருக்கு அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீருக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.