ஜீ தமிழ் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ கிராண்ட் பினாலே.. வெற்றி மகுடம் சூடியது யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சின்னத்திரையின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ், தனது சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது. அந்த வரிசையில், பல வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் பிரம்மாண்ட கிராண்ட் பினாலே முடிவடைந்து, வெற்றி மகுடத்தைச சூடிய ஜோடி அறிவிக்கப்பட்டுள்ளது
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சி, சிறந்த டான்ஸ் பெர்ஃபாமென்ஸ், நடுவர்களான பிரசாந்த், சிம்ரன், சினேகா ஆகியோரின் கலகலப்பான விமர்சனங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் மணிமேகலை, அசார் ஜோடியின் அல்டிமேட் கலாய்ப்புகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கோமதி & கென்னி: இறுதி போட்டிக்கு முன்னேறிய கோமதி & கென்னி, அருணிமா & அபிஷேக், ஷாலினி & பிரிட்டோ, சாண்ட்ரா & கஜினி, நிகிதா & நவீன் ஆகிய டாப் 5 ஜோடிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. கடைசி நிமிடம் வரை பரபரப்பாகச் சென்ற போட்டியில் சிறப்பான நடனம் மற்றும் கிரியேட்டிவிட்டியால் ரசிகர்களின் மனதை வென்ற கோமதி & கென்னி ஜோடி முதலிடம் பிடித்து பிரம்மாண்ட கோப்பையை கைப்பற்றியது. நிகிதா & நவீன் ஜோடி முதல் ரன்னர் அப் விருதை பெற்றது. அருணிமா & அபிஷேக் ஜோடி இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பிடித்தனர். வெற்றி குறித்து பேசிய கோமதி & கென்னி, டான்ஸ் ஜோடி டான்ஸ் வெற்றியாளர்களாக மாறியது என் ஆயுசுக்கும் மறக்க முடியாத தருணம். இந்த பயணம் முழுவதும் எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்த நடுவர்கள், ரசிகர்கள் மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற்னர்.
நெகிழ்ச்சித் தருணம்: நடன நிகழ்ச்சியில் நடனத்தை தாண்டி, சமூக மாற்றத்திற்கும் இந்த மேடை பாலமாக அமைந்தது என்று சொல்லலாம். போட்டியில் பங்கேற்ற திருநங்கை கோவை சூர்யா வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்காக புதிய விடுதிகளை கட்டித் தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதே போல மற்றொரு போட்டியாளரான ஷாலினியின் மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு, அவன் முதன்முறையாக தனது தாயை "அம்மா" என்று அழைத்த நெகிழ்ச்சியான தருணமும் இந்த மேடையில் அரங்கேறி அனைவரையும் கண்ணீரில் நனைய வைத்தது. திறமை, விடாமுயற்சி மற்றும் மனிதநேயத்தைக் கொண்டாடிய ஜீ தமிழின் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' சீசன், ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை விட்டு சென்றுள்ளது