📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 26, 2026 10:03 AM

“ஜெம் வீரமணி வழக்கில் புது வில்லன்!”

“ஜெம் வீரமணி வழக்கில் புது வில்லன்!”

“ஜெம் வீரமணி வழக்கில் புது வில்லன்!” - போட்டு உடைக்கிறார் ரஞ்சன் குமார்

“2024-ல் வீடு விற்பது தொடர்பாக என்னிடம் அறிமுகமான ஜெம் கிரானைட் வீரமணிக்குத் தொடர்புடைய சாந்தி, ஜான் பாண்டியனைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டார்.

‘‘2024-லேயே புகார் கொடுத்தேன்... போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை!’’ - ஜெம் கிரானைட் வீரமணி குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி பிரிவுத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்.

“இந்த விவகாரம் உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?”

“அந்த வீடியோ குறித்து சாந்தியிடம் கேட்கவில்லையா?”

“ `ஏன் எனக்குக் காண்பித்தீர்கள்?’ என்று கேட்டபோது சாந்தி அழுதார். அவர் கணவர் வந்து சமாதானப்படுத்தினார். தேவையில்லாத பிரச்னையில் என்னை மாட்டிவிட வேண்டாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.”

“இது குறித்து எப்போது போலீஸில் புகாரளித்தீர்கள்?”

“வழக்கறிஞரிடம் ஆலோசித்து, 2024 நவம்பரில் அப்போதைய சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணனிடம் புகாரளித்தேன். வீடியோவையும் ஆதாரமாகக் கொடுத்தேன். நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். 2024 டிசம்பரில் விபசாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ் என்னைத் தொடர்புகொண்டு ஆதாரங்களைக் கேட்டார். வீடியோவை ஏற்கெனவே கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட சிறுமி குறித்தும் கேட்டார். சம்பந்தப்பட்ட முதியவர், சாந்தி ஆகியோரிடம் விசாரிக்கும்படி கூறினேன். ஆனால், என் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.என்.ஜி.ஓ மூலம் வீரமணி தொடர்பான வீடியோ 2025 அக்டோபரில் கிடைத்ததாக போலீஸார் கூறுகிறார்கள்.”

“தற்போது உங்கள்மீது கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?”

“நான் எந்தக் கட்டப்பஞ்சாயத் திலும் ஈடுபடவில்லை. சாந்தியிடமோ, வீரமணி தரப்பினரிடமோ ஒரு பைசாகூட வாங்கவில்லை. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பேன்.”

“சிறுமியுடன் வீரமணி தனிமையில் இருக்கும் வீடியோ எப்படி எடுக்கப்பட்டது?”

“ ‘என்மீதும், வீரமணிமீதும் கணவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், பெட்ரூமில் அவர் வைத்த சீக்ரெட் கேமராவில்தான் வீரமணியும் சிறுமியும் சிக்கிக் கொண்டனர்’ என்று சாந்தி கூறினார். இப்படி இந்த வழக்கில் பல வில்லன்கள் இருக்கின்றனர்.”

வழக்கு விசாரணை முடிவதற்குள் இன்னும் எத்தனை வில்லன்கள் வருவார்களோ?