📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 15, 2026 02:31 AM

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் தவெகவுக்கு பின்னடைவு இல்லை

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் தவெகவுக்கு பின்னடைவு இல்லை

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் த.வெ.க.வுக்கு பின்னடைவு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூரில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில், மத நல்லிணக்கம் நிறைந்த நாடு. ஜாதி, மத பாகுபாடு இன்றி இந்த அரசு இயங்கி வருகிறது.

எல்லோரும் சமம் என்ற அடிப்படையில், அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

2 இயக்கங்களும் தேவையில்லை. ஒரு புதிய ஆட்சி வேண்டும், மலர வேண்டும் என்று பெண்களும், இளைஞர்களும் நல்ல மனது கொண்ட அத்தனை பேரும் ஆதரவின் அடிப்படையில், இன்று சிறந்த ஆட்சி தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார்.

நிலவரி இங்கு அமலில் இல்லை. நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய் துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஆட்சியைப் போல் அல்லாமல் அனை வருக்கும் விரைந்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெறும் பட்டா என்று காகித அளவில் இல்லாமல், இடத்தை தேர்வு செய்து எல்லை கல் அமைத்த பிறகுதான் பட்டா வழங்குகிறோம்.

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர். கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.