📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 18, 2026 10:03 PM

"இந்திய அணியில் எனக்கு இடம் இல்லை என்பது பழகிவிட்டது" .. வேதனையை கொட்டிய அபிமன்யு ஈஸ்வரன்

"இந்திய அணியில் எனக்கு இடம் இல்லை என்பது பழகிவிட்டது" .. வேதனையை கொட்டிய அபிமன்யு ஈஸ்வரன்

"இந்திய அணியில் எனக்கு இடம் இல்லை என்பது பழகிவிட்டது" .. வேதனையை கொட்டிய அபிமன்யு ஈஸ்வரன்

கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் கூட ஆடாத ஒரு வீரர் தான் அபிமன்யு ஈஸ்வரன். இந்திய அளவிலான உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் 8,600 ரன்களுக்கு மேல் குவித்தும், பலமுறை தேசிய அணிக்குள் சென்றும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-இலும் அபிமன்யு ஈஸ்வரன் ஆடவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட போதிலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவே இல்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. தற்போது இந்திய ஏ அணியில் இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், பெங்கால் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கும் அவர் தனது விடாமுயற்சியைத் தொடர்ந்து வருகிறார்.

சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பெங்கால் அணியின் கேப்டனாக வழிநடத்தி 56 ரன்கள் அடித்த அபிமன்யு ஈஸ்வரன், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். "ஒவ்வொரு முறை இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் என் பெயர் விடுபடுவதைப் பார்த்து, 'மறுபடியும் எனக்கு இடம் இல்லையா?' என்ற விரக்தி தோன்றுவது இயல்புதான். ஆனால் காலப்போக்கில் இதனை நான் பழகிக் கொண்டேன். எந்த அணிக்காக விளையாடினாலும் களத்தில் இறங்கி ரன் குவிப்பதே என் ஒரே கடமை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அபிமன்யு, "கிரிக்கெட் பேட்டைப் பிடித்த காலம் முதல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். அதே சமயம் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து உருவாக்கிய பெங்கால் அணியை வழிநடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 2019-20 ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிராவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை நழுவவிட்டோம். இந்த முறை பெங்கால் அணிக்கு ரஞ்சி கோப்பையை வென்று தருவதே எனது இலக்கு" எனக் கூறினார்.

டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் அடித்து பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் அபிமன்யு ஈஸ்வரன். தற்போது சர்வீசஸ் அணிக்கு எதிராக விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், தகுந்த திட்டத்துடன் நின்று 106 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். கடினமான ஆடுகளத்தில் பெங்கால் அணி 184 ரன்கள் எடுக்க உதவினார். தேர்வுக்குழுவினர் தொடர்ந்து புறக்கணித்தாலும், சளைக்காமல் தனது பேட் மூலமாக மட்டுமே ஈஸ்வரன் பதிலடி கொடுத்து வருகிறார்.