📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 18, 2026 01:30 PM

இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கிறது? முழு ராசிபலன் இதோ!

இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கிறது? முழு ராசிபலன் இதோ!

இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கிறது? முழு ராசிபலன் இதோ!

இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் பலன்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படலாம். தந்தை வழி உறவினர்களால் சில பிரச்னைகள் தோன்றி மறையும். தேவையற்ற செலவுகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது.

நட்சத்திர பலன்:

மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நாள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், விற்பனையும் அதிகரிக்கும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவார்கள். கணவன் - மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் சிறு தாமதம் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படலாம்.

முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். உறவினர்கள் விஷயத்தில் பொறுமை அவசியம். சிலருக்கு ஆன்மிக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பண உதவி கேட்கலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலை தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.

காரியங்களில் சாதகமான சூழல் உருவாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதத்தை பொறுமையுடன் சமாளிக்கவும். வேலை காரணமாக பயணங்கள் ஏற்படலாம். வியாபாரம் வழக்கமான நிலையில் இருக்கும்.

விருச்சிகம்

சகோதரர்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பத்தில் சிறு சலசலப்புகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் மனநிறைவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் சிறு தாமதம் ஏற்படலாம். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

காரியங்கள் சாதகமாக முடியும். அதிக செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.