📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 11, 2026 05:40 PM

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியது இல்லை; 2027ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் கட்டண முறை

இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியது இல்லை; 2027ல் அறிமுகமாகிறது டிஜிட்டல் கட்டண முறை

மும்பை: நாடு முழுவதும் 2027ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் டிஜிட்டல் முறையிலான சுங்கக்கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது;

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுங்கக்கட்டணத்தை வசூலிக்கும் முறையை நோக்கி அரசு நிர்வாகம் நகர்ந்து வருகிறது. பாஸ்டேக்கை வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய முறை, சுங்கக்கட்டண வசூலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தரும்.

வாகன பதிவு எண் மற்றும் பாஸ்டேக் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் வகையிலான சுங்கக்கட்டண முறையால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.10000 கோடி வருவாய் கிடைக்கும். ஒரு காலத்தில் 12 நிமிடங்கள் வரையிலும், சில நேரங்களில் 30 நிமிடங்கள் வரையிலும் சுங்கச் சாவடிகளில் காத்திருந்த நேரம், பாஸ்டேக் முறையால் குறைந்தது.

இன்னும் நேரத்தை சேமிக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையை அரசு நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்த தடையற்ற டிஜிட்டல் சுங்கக்கட்டண வசூல் முறையின் நோக்கமே, நிறுத்தங்களை நீக்குவதேயாகும். எரிபொருள் பயன்பாடு, நேரம் சேமிப்பு ஆகியவற்றுக்கு உதவும்.'

இந்த ஆண்டு இறுதிக்குள் 60 முதல் 70 சதவீதம் பணிகள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தாண்டு பிப்-மார்ச்சுக்குள் நாடு முழுவதும் தடையற்ற சுங்கக்சாவடி கட்டண வசூல் முறை கொண்டு வரப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.