IND vs SL: ஏமாற்றிய அபிஷேக், சஞ்சு.. சரமாரியாக அடித்த வைபவ்.. செமி பைனலில் இலங்கையுடன் மோதல்
IND vs SL: ஏமாற்றிய அபிஷேக், சஞ்சு.. சரமாரியாக அடித்த வைபவ்.. செமி பைனலில் இலங்கையுடன் மோதல்
நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. தங்கப் பதக்க வாய்ப்பை தீர்மானிக்கும் இந்த முக்கிய ஆட்டத்தில் டாஸ் போடப்பட்டு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே சிக்சர் மழையை பொழிவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் ஓவரில் இந்திய அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்ததாக 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 12 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அபிஷேக் சர்மா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 3வது வரிசையில் களமிறங்கினார். வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடினார். பின்னர் அவர் 9 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி 21 பந்துகளில் 38 சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் இருந்தவரை இந்திய அணி ஓவருக்கு 9 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்தது. அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் பேட்டிங் செய்தனர். இந்த அரையிறுதியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தங்கப் பதக்கத்திற்காக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.