IND vs AFG: பிளேயிங் 11இல் அதிரடி.. சீனியருக்கு ஓய்வு..வைபவ் சூர்யவன்ஷி உள்ளே.. 3 அதிரடி மாற்றங்கள்
IND vs AFG: பிளேயிங் 11இல் அதிரடி.. சீனியருக்கு ஓய்வு..வைபவ் சூர்யவன்ஷி உள்ளே.. 3 அதிரடி மாற்றங்கள்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்கூட்டியே கைப்பற்றிவிட்ட இந்திய அணி, செப்டம்பர் 17 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள 3-வது மற்றும் கடைசி போட்டியில் 3 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன் மாற்று வீரர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த முடிவை தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுத்துள்ளார். அதன்படி, முதல் 2 போட்டிகளிலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரப்பட உள்ளது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தலா ஒரு அதிரடி அரைசதம் அடித்திருந்தாலும், வைபவை தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டி அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம்.
காயத்தில் இருந்து மீண்டு முதல் 2 போட்டிகளிலும் தலா 4 ஓவர்கள் வீசி அசத்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட உள்ளது. பும்ராவுக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் சமநிலையை அதிகரிக்கும் வகையில் 3-வது மாற்றமாக சிவம் துபேவுக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படலாம். பவர்பிளே ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசக்கூடிய வாஷிங்டன் சுந்தரின் வருகை பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும்.
மேலே கூறிய மாற்றங்களை செய்தால், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறாத வைபவ் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர், யாஷ் தாக்கூர் ஆகிய மூவருக்கும் 3வது டி20 போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆப்கானிஸ்தான் 3வது டி20 போட்டிக்கான இந்திய உத்தேச பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர்.