📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 06:01 PM

சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றுக்கொண்டார் தனுஷ்; ஜிவி பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது

சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றுக்கொண்டார் தனுஷ்; ஜிவி பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது

ஆமதாபாத்: சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது.

2024ம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது.விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதாளர்களை பாராட்டி, அதற்கான விருதுகளை வழங்கினர்.

சிறப்பு அங்கீகாரம் பிரிவில், சோலா தோரா அவுர் சூரி என்ற ஹிந்தி படத்தை இயக்கிய ஜெய்மின் மோடிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பத்ரகாளி நாடகம் என்ற மலையாள படத்திற்காக ஆனந்தஜோதி பாலக்பள்ளிக்கு அளிக்கப்பட்டது.

ஹிந்தி, காஷ்மீரி மொழியில் வெளியான ஓபுர் என்ற படம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் திரைக்கதை ஆசிரியர் பராஸ் அலிக்கு விருது வழங்கப்பட்டது. ஏ டேல் ஆப் ப்ராக்ஸ் (A tale of Frogs) என்ற ஹிந்தி படத்தில் பின்னணி குரல் கொடுத்த சவுந்தர்யா ஜெயசந்திரனுக்கு சிறந்த பின்னணி குரலுக்கான விருது வழங்கப்பட்டது.

கேப்டன் மில்லர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடுவர் குழுவின் சிறப்பு விருதை நடிகர் தனுஷ்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

இதேபோன்று சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ராயன் படத்திற்கு அளிக்கப்பட்டது. சிறந்த இயக்குநர் விருதை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார்.

சிறந்த சண்டை பயிற்சி இயக்குநராக மகாராஜா படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்த அனல் அரசு பெற்றுக் கொண்டார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பிரம்மயுகம் படத்தின் கேமிராமேன் ஷெகனாத் ஜலாலுக்கு வழங்கப்பட்டது.

ஆர்டிக்கிள் 370 என்ற ஹிந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருத நடிகை யாமி கவுதம் தர் பெற்றுக் கொண்டார்.

பிரம்மயுகம் படத்திற்கு சிறந்த நடிகர் (பகிர்வு) தேசிய விருதை பெற்றார் நடிகர் மம்முட்டி. இந்த விருதை அவர், சந்து சாம்பியன் என்ற ஹிந்தி படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனுடன் பகிர்ந்து கொண்டார்.

திரைத்துறையில் சாதனைகள் படைத்ததற்காக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை கன்னட நடிகர் அனந்த நாக் பெற்றுக்கொண்டார்.