📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 11, 2026 05:32 PM

சிங்கப்பூர் பட்டிமன்றம்: புதுமைச் சிந்தனையா? பாரம்பரியமா?

சிங்கப்பூர் பட்டிமன்றம்: புதுமைச் சிந்தனையா? பாரம்பரியமா?

பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து சிறப்புப் பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) மாலை, எண் 21கிளௌசெஸ்டர் ரோட்டில் (Gloucester Rd) அமைந்துள்ள பெக்கியோ சமூகமன்றத்தின்இரண்டாம் தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

‘60 ஆண்டுகள் சாதனை படைத்த சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் பெரிதும் தேவை புதுமைச் சிந்தனையா? பாரம்பரிய விழுமியங்களா?’ என்ற தலைப்பில் விவாதிக்கும் இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராகத் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பங்குபெறுகிறார்.

புதுமைச் சிந்தனையே என்ற தலைப்பில் திருமதி இசக்கிசெல்வி கோவிந்தன், திருமதி மீனாட்சி சங்கர், திரு சேதுராமன் ரமேஷ்ராஜா ஆகியோரும் பாரம்பரிய விழுமியங்களே என்ற தலைப்பில் திருமதி சக்திதேவி தமிழ்ச்செல்வன், திரு கேத்திரபாலன் மூக்காண்டி, திருமதி செவியின்பம் சங்கீதா ஆகியோரும் வாதிடுகின்றனர்.

மாலை 5.30 மணிச் சிற்றுண்டியைத் தொடர்ந்து, சரியாக 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

செய்தி : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்