📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 09:04 AM

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர்கள்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர்கள்

தெமாசெக் இன்டர்நே‌ஷனல் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியும் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய இயக்குநருமான 73 வயது லீ தெங் கியெட் சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐ) நிர்வாகக் குழுவில் சேர்ந்துள்ளார்.

அவருடன் கார்ல்ஸ்பர்க் நிறுவனத்தின் தலைவரான 59 வயது ஹென்ரிக் பூல்சனும் எஸ்ஐஏ நிர்வாகக் குழுவில் சேர்கிறார்.

திரு லீ, எஸ்ஐஏ நிர்வாகக் குழுவின் எக்சிக்கியூட்டிவ் குழுவிலும் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு, அபாயக் குழுவிலும் சேர்வார். பூல்சன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி எஸ்ஐஏ பாதுகாப்பு, அபாயங்கள் குழுவில் சேர்வார்.