📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 01:08 PM

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

செவிலியர்கள் போராட்டம்

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.

“பாசிசம், பாயாசம்” என்று Rhyming வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த Reels முதல்-அமைச்சர் Justify செய்வார்?

ஆட்சிக்கு வருவது முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக இருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா? தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.

பேச்சுவார்தை

கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.